சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 50 லட்சம் வீடுகளில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த தேசிய கொடியை 13, 14 மற்றும் 15 ஆகிய 3 தேதிகளில் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் ஏற்றி வைக்க வேண்டும்.
இந்த தேசிய கொடியை பொதுமக்கள் தபால் நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் போன்றவைகளில் 25 மற்றும் 40 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாஜக தற்போது தொடங்கியுள்ளது. இந்த தேசியக் கொடியை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக மக்கள் அனைவரும் சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும்.