எல்.ஐ.சி சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அமைந்துள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல். ஐ. சி. ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க செயலாளர் மு. தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் எல். ஐ. சி. நிர்வாகிகள் ஏற்றுக் கொண்ட அனைத்து குடும்ப ஓய்வூதியர்களுக்கும், இறுதியாக பெற்ற ஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும்,
இதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி அனுப்பப்பட்ட மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் எஸ். ராமன், பொருளாளர் வி. ஆர். ராதா கிருஷ்ணன், எல் ஐ சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.