Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன்-மனைவி…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கணவன்-மனைவியை வழிமறித்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடலங்குடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சரவணனும், வசந்தியும் கடந்த 2-ந்தேதி மோட்டார்சைக்கிளில் நாச்சியார்கோவிலில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு துக்காச்சி சுடுகாடு அருகில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, கணவன்-மனைவி ஆகியோரை தாக்கி வசந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து சரவணன் குடவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |