மழை வெள்ளத்தின் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நெக்கினி, தானிமர்த்தூர், கொளையம், வேட கொல்லை மேடு, நம்மியம்பட்டு, கீல் கொல்லை, உசனாவலசை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனையடுத்து மாலை இடி மின்னலுடன் பலத்த கன மழை பெய்துள்ளது. இந்த மழை நீர் நாக நதி, நஞ்சுக்கொண்டாபுரம், பாலாத்துவண்ணான் ஆகிய தடுப்பணை வழியாக கமண்ட்ல நாக நதி ஆற்றில் கலக்கிறது.
இதனால் ஆற்றின் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்த வெள்ளத்தால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்