பிரபல அமேசான் நிறுவனம் செல்போன் வாங்குவதற்கு சூப்பர் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையை சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் பொது மக்கள் ஆடைகள், கிச்சன் பொருட்கள், தொலைக்காட்சி, லேப்லட், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன் போன்றவைகளை வாங்கலாம். இந்த சலுகை ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மட்டுமே. இந்நிலையில் சிறப்பு சலுகையில் IQOO Neo 6 5G ஸ்மார்ட் போன் 29,999 ரூபாயிலிருந்து 26,749 ரூபாயாக குறைந்துள்ளது.
இதனையடுத்து IQOO Z6 5G ஸ்மார்ட் போன் 16 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்து 14, 499 ரூபாய் ஆகவும், ஒன் பிளஸ் 10 ஆர் 5 ஜி ஸ்மார்ட் போன் 38, 999 ரூபாயிலிருந்து, 33 ஆயிரத்து 749 ரூபாய் ஆகவும், ஓப்போ ஏ57 ஸ்மார்ட் போன் 12,489 ரூபாயிலிருந்து, 11,249 ரூபாயாகவும், Realme narzo 50A ஸ்மார்ட் போன் 11,499 ரூபாயிலிருந்து 8,749 ரூபாய் ஆகவும், ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட் போன் 9499 ரூபாயிலிருந்து, 7299 ரூபாய் ஆகவும், ரெட்மி நோட் 11டி 5 ஜி ஸ்மார்ட்போன் 16 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்து 13,499 ரூபாய் ஆகவும் குறைந்துள்ளது.
மேலும் சாம்சங் கேலக்ஸி எம்13 11 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்து 9,999 ரூபாயாகவும், டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட் போன் 999 ரூபாயிலிருந்து 8249 ரூபாய் ஆகவும், xiaomi 11 lite NE 5G ஸ்மார்ட் போன் 26 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்து 19,999 ரூபாய் ஆக குறைந்துள்ளது.