நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதனை நடத்தி வருகிறது.அவ்வகையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மூவர்ண தேசியக் கொடியை வீடுகளுக்கு கொண்டு வரவும் மக்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு இல்லம் தோறும் மூவரணம் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி தபால் அலுவலகங்களில் நாட்டின் தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் 25 ரூபாய் என்ற விலையில் வாங்கிக் கொள்ளலாம். சென்னையில் 20 தலைமை தபால் நிலையங்கள், 545 துணை தபால் நிலையங்கள்,1626 கிளை தபால் அலுவலகங்கள் என மொத்தம் 2,191 தபால் அலுவலகங்களிலும் இந்த கொடி விற்பனை செய்யப்படுகிறது. அருகிலுள்ள தபால் நிலையத்தில் கொடிகளை சில்லறையாக அல்லது மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் www.epostoffice.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.