Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.1500….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்களுக்கு மேம்படுத்திக் கொள்ளும் விதமாக 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வுகள் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் தங்கள் பள்ளியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Categories

Tech |