Categories
உலக செய்திகள்

லுங்கியுடன் சென்ற நபருக்கு டிக்கெட் மறுப்பு…. வைரலான வீடியோ… விளக்கமளித்த திரையரங்க நிர்வாகம்…!!!

வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் இருக்கும் மல்டி பிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் லுங்கியுடன் சென்ற நபருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த வீடியோ வைரலானதை தொடர்ந்து திரையரங்கு நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் இயங்கி வரும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் ஒரு நபர் லுங்கியுடன் திரைப்படம் பார்க்க சென்றிருக்கிறார். அவருக்கு டிக்கெட் கொடுக்கப்படவில்லை. இது குறித்து அந்த நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், லுங்கியுடன் சென்றதால் தனக்கு டிக்கெட் தர மறுத்துவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோ, இணையதளங்களில் வைரலாக பரவியது. அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்து பல ஆண்கள் லுங்கியுடன் திரையரங்குகளுக்கு சென்றார்கள். இந்நிலையில் குறித்த திரையரங்கு நிர்வாகம் தங்களின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, வாடிக்கையாளர்களிடையே நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

லுங்கியுடன் வரும் நபர்களுக்கு டிக்கெட் கொடுப்பதை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் கிடையாது. எங்கள் திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டு களிக்க வரும் மக்களுக்கு எப்போதும் வரவேற்பு அளிக்கிறோம். இந்த சம்பவத்தை தவறாக புரிந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த நபர் மற்றும் அவரின் குடும்பத்தினரை, அந்த திரையரங்க நிர்வாகம் படம் பார்க்க வரவழைத்து, அவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |