ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய காலத்தில் காதல் செய்யாத இளைஞர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஒருசிலர் வேண்டுமானால் இருக்கலாம். சிலர் நீண்ட நாட்களாக ஒருதலையாகவே காதலித்து வருகின்றனர். சமயம் பார்த்து காதலை சொல்ல நினைக்கின்றனர். ஆனால் காதலை ஏற்க மறுத்து விட்டால் ஓன்று அந்த பெண்ணை கொலை செய்ய முயல்கின்றனர். இல்லையென்றால் தங்களை தானே அழித்து கொள்ள நினைக்கின்றனர். இப்படி காதலுக்காக பல இளைஞர்கள் இறந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் வசித்து வருபவர் இளைஞர் அருண் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மீது காதலில் வயப்பட்டு விட்டார். அதனால் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒருநாள் அந்த மாணவியிடம் காதலை சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த மாணவியோ காதலை ஏற்க மறுத்து விட்டதால், ஏற்கனவே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் அருண்குமார்.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் அந்த கல்லுரி மாணவி நின்று கொண்டிருந்தாள். அப்போது மாணவியிடம் போய் மீண்டும் தனது காதலை அருண் குமார் தெரிவித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த மாணவி மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த அருண் தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு தற்போது 60 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.