தி லெஜண்ட் படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சரவணன் அருள் முதல் முறையாக தயாரித்து நடித்த திரைப்படம் தி லெஜன்ட். இந்த படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மும்பை மாடல் அழகி ஊர்வசி ரவுத்தாலா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான நிலையில் ஒரு வார வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழகத்தில் 800 தியேட்டர்களில் வெளியான நிலையில், நாடு முழுவதும் 1200 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தி லெஜன்ட் படம் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப் பட்டுள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப் பட்டுள்ளது. மேலும் தி லெஜெண்ட் திரைப்படம் 30 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விளம்பரத்திற்காக மட்டும் சரவணன் 40 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.