தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி கற்றதால் மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பொருட்டு பள்ளிக்கல்வித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக பல கல்விசார் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது தற்போது 1-3 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அனைத்து எண்களையும், எழுத்துக்களையும் முழுமையாக கற்பிக்கும் நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கமானது 2025-ம் வருடத்திற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும், அடிப்படை கணித திறன்களை வளர்ப்பதும் ஆகும். அத்துடன் இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் எத்தகைய விளைவுகளை பெற்றுள்ளார்கள் என்பதை வகுப்பாசிரியர் TNSED செயலியில் பதிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் கற்றலை கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் பள்ளி, வகுப்பறை சூழலிலிருந்து ஆசிரியர் மதிப்பீடு செய்வதே வளரறி மதிப்பீடு FA (b) ஆகும். இதை எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மதிப்பீட்டு செயலில் பதிவுசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNSED செயலில் FA(b) மதிப்பெண் பதிவுமுறைகள்:
TNSED செயலியை திறந்து அவற்றில் உங்களின் பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
அவற்றில் வரும் மெனுவில் FORMATIVE என்பதை கிளிக்செய்து FORMATIVE ‘B’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்ததாக SELECT TERM , MONTH என்பதை கிளிக்செய்து அதை தேர்வுசெய்ய வேண்டும்.
பின் மதிப்பெண் அளிக்கக்கூடிய பாடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனுள் சென்று மாணவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து அதை மதிப்பீடு செய்ய வேண்டும்.