Categories
உலக செய்திகள்

“உண்மைக்கு புறம்பாக பொய் சொல்கிறார்”… எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் குற்றச்சாட்டு….!!!!

பெரும் பணக்காரர் மற்றும் டெஸ்லா தலைவருமான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை ரூபாய்.3.50 லட்சம் கோடிக்கு வாங்குவதாக சென்ற ஏப்ரலில் ஒப்பந்தம் செய்தார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் கூறியதைவிட 4 மடங்கு போலி கணக்குகள் உள்ளதாகவும், அது தொடர்பான முழுவிபரங்களை தராததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாகவும் எலான்மஸ்க் அறிவித்தார். இதன் காரணமாக டுவிட்டரின் பங்குகள் சரிந்தது. அதன்பின் அமெரிக்க நீதிமன்றத்தில் எலான்மஸ்க் மீது டுவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இவ்விசாரணை வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என டெலாவேர் சான்சரி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் எலான்மஸ்க் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் “உண்மையான பயனர்களின் எண்ணிக்கை 6.5 கோடிக்கு குறைவாக உள்ளதை மறைத்து, 23.8 கோடி பயனர்கள் இருப்பதாக கூறி டுவிட்டர் என்னை ஏமாற்றிவிட்டது. குறைந்த பயனர்கள் பார்க்கும் விளம்பரத்தின் வாயிலாக நான் எவ்வாறு வருவாய் ஈட்ட முடியும்?.. என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக டுவிட்டர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஒப்பந்தத்தை மீறுவதற்காக உண்மைக்கு புறம்பான பொய்களை எலான்மஸ்க் கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |