Categories
தேசிய செய்திகள் வானிலை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை….. மழை நீடிக்க வாய்ப்பு….!!!!

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தினால் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை அதன் இயல்பான நிலையில் இருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக பரவலாக மழை மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் ஷட்டர் நேற்று திறக்கப்பட்டது. கேரளாவின் பெரியாற்றில் வினாடிக்கு 2,219 கன அடி தண்ணீர் வருகிறது. தமிழகத்திற்கு 2,166 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் மேலும் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |