Categories
மாநில செய்திகள்

“இது குடும்பத்தை அழித்து விடுகிறது”… அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!

போதைப்பொருள் அழிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் “இளையசமுதாயத்தின் எதிர்காலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருட்களின் பாதிப்புகள் பற்றி உங்களின் கவனத்தை ஈர்க்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். சமூகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிப்பதற்கு உறுதியேற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்கவேண்டும்.

போதைப் பாதையானது அழிவுப்பாதை என்பதை நாடும், நாட்டுமக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறார்கள். போதைப்பொருட்கள் அவர்களுடைய சிந்தனையை அழித்துவிடுகிறது. அதுமட்டுமின்றி வளர்ச்சியைத் தடுத்துவிடுகிறது. அத்துடன் எதிர்காலத்தைப் பாழாக்கி அவர்களது குடும்பத்தையும் அழித்துவிடுகிறது. ஆகவே இது நாட்டின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கிறது” என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |