Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை!… சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்…. வியாபாரிகள் அவதி….!!!!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து காலை 8:30 மணியளவில் லேசான சாரல்மழை விழுந்தது. அதன்பின் சிறிதுநேரம் மழை இல்லாமல் இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கனமழை கொட்டும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறு துளிகளாக தொடங்கிய மழை பகல் 11 மணி வரை நீடித்தது. இவ்வாறு மழை தொடங்கிய சுமார் 1 மணி நேரத்திலேயே மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பெருந்துறை ரோடு, சென்னி மலை ரோடு பகுதிகளில் சாலைகள் காட்டாறு போல மாறியது. இதனிடையில் சம்பத்நகர் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று கொல்லம்பாளையம், மூலப்பாளையம் பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் காட்டாறாக ஓடியது. மேலும் அண்ணமார் பெட்ரோல்பங்க் பகுதியில் தண்ணீர் குளம்போல தேங்கியது. அங்கு உள்ள சுடுகாடு பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாக்கடை கால்வாயில் வெள்ளநீர் அதிவேகமாக பாய்ந்தது.

அத்துடன் பன்னீர்செல்வம் பூங்கா, கடைவீதி, ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன் கோயில் பகுதி என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையில் ரயில்வே நுழைவு பாலங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் நிரம்பிஓடியது. மதியம் வரை லேசான தூறலுடன் இருந்த மழை விட்டுவிட்டு மாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் நேற்று குளிர்காற்று வீசியது. எனினும் சாலையோர வியாபாரிகள், அன்றாட கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Categories

Tech |