Categories
உலக செய்திகள்

“1 நாளைக்கு அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே” ரஷ்யாவால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பெண்…. ஆறுதல் தெரிவித்த இங்கிலாந்து இளவரசர்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் போது பைவ்ஸ்கா என்ற 53 வயது பெண்மணி உக்ரைன் நாட்டிற்கு உதவுவதற்காக இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இந்நிலையில் மரியுபோலில் உள்ள ஒரு திரையரங்கில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த போது அங்குள்ள பொது மக்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக பைவ்ஸ்கா சென்றார். அப்போது ரஷ்ய ராணுவ வீரர்களால் பைவ்ஸ்கா கைது செய்யப்பட்டு 3 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை ரஷ்ய ராணுவம் தற்போது விடுதலை செய்துள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்தால் 3 மாத காலமாக தான் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளதாக பைவ்ஸ்கா‌ கூறியுள்ளார்.

இதன் காரணமாக இராணுவத்தை விட்டு விலகி தன்னுடைய குடும்பத்துடன் மீதி காலத்தை செலவிட பைவ்ஸ்கா முடிவு செய்துள்ளார். இந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹரி செல்போன் மூலமாக பைவ்ஸ்காவுக்கு தொடர்பு கொண்டு உங்களுடைய உதவி உக்ரைன் நாட்டிற்கு வேண்டும் எனவும், ஒரு சிறு உதவி கூட நாட்டை காப்பாற்ற உதவும் எனவும், உங்களை போன்ற வீர பெண்மணி கண்டிப்பாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாக பைவ்ஸ்கா மீண்டும் ராணுவத்தில் சேர்ந்து உக்ரைன் நாட்டிற்காக பணியாற்ற முடிவு செய்துள்ளார். மேலும் பைவ்ஸ்கா சிறையில் இருந்தபோது ரஷ்ய ராணுவ வீரர்கள் அரை டம்ளர் தண்ணீர் மட்டும்தான் ஒரு நாளைக்கு குடிப்பதற்கு கொடுத்தனர் என பைவ்ஸ்கா கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Categories

Tech |