Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. நடைபயிற்சியில் ஈடுபட்ட நண்பர்கள் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!

தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜித்குமார்(39), வீரவேல்(45), ஜெகதீசன்(38) ஆகிய நண்பர்கள் இருக்கின்றனர். இதில் அங்கிநாயனப்பள்ளி அருகே ஜெகதீசன் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு செல்லும் மற்ற நண்பர்கள் தினமும் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று மாலை நண்பர்கள் நான்கு பேரும் அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தறிக்கட்டு ஓடிய கார் நண்பர்கள் மீது மோதி பள்ளத்தில் இறங்கி நின்றது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சுஜித்குமார், பாக்யராஜ், வீரவேல் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெகதீசனும் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் காரை ஓட்டி வந்த தணிகைமலை(40) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |