கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் இருக்கும் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பாரத் நகர் மற்றும் எஸ்.கொடிக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து வீட்டிற்குள் இருந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர்கள் புதூர் மூன்றுமாவடி பரசுராமன்பட்டியை சேர்ந்த மரிய ஆரோக்கியதாஸ்(25), கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த சியாம் சுந்தர்(22), அகஸ்டின்(23), நடராஜ் நகரைச சேர்ந்த முருகானந்தம்(22) மற்றும் விக்னேஷ்(23) என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 2 கத்திகள், 4 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 40 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.