திண்டுக்கல்லில் கணவனை கொலை செய்து விட்டு மகனை தாய் ஜெயிலுக்கு அனுப்பியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது பழனியை சேர்ந்தவர் ஓமந்தூரார். ஓமந்தூரானுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். இவர் தன் மனைவி பாண்டீஸ்வரி பெயரில் இருக்கும் சொத்துக்களை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.இதனால் பாண்டீஸ்வரி உறவினர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துள்ளார்.
அதன் பிறகு மகனுக்கு 15 வயது என்பதால் அவனுக்கு தண்டனை குறைவு என மகனை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிய வர போலீசார் பாண்டீஸ்வரி கைது செய்துள்ளனர்.தனையடுத்து அவர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். கணவனைக் கொன்று விட்டு ஈவு இரக்கமில்லாமல் பெற்ற மகனை ஜெயிலுக்கு அனுப்ப தாய் முயற்சி செய்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.