Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி கீழே விழுந்த வியாபாரி…. வீட்டிற்கு சென்ற போது நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மொபட்டில் இருந்து கீழே விழுந்த வியாபாரி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் கந்தன் நகரில் தங்கவேல்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் செய்துவிட்டு தங்கவேல் கொந்தளம் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த தங்கவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |