Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

7 மாத குழந்தை மர்மமாக இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திரநாத்- சிசிலி ஊரான் தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகளும், 7 மாத சசிகா ஊரான் என்ற குழந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் இந்திரநாத் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரகுந்தா பகுதியில் இருக்கும் தனியார் எஸ்டேட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் சசிகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு சிசிலி பால் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு குழந்தை தூங்கிவிட்டது. இதனை அடுத்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை பெற்றோர் மஞ்சுர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சசிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |