Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கால் எலும்புகள் மடக்கிய நிலையில் கிடந்த எலும்புக்கூடு…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி கடற்கரையில் கால் எலும்புகள் மடங்கிய நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ரோச் பூங்கா அருகில் சதுப்புநிலக் காட்டுப் பகுதியில் ஒரு எலும்பு கூடு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எலும்புக்கூடு கிடந்த இடத்தை பார்வையிட்டனர். அதில் ஒருவர் கால் எலும்பு மடங்கிய நிலையிலும், டவுசர் அணிந்த நிலையிலும் எலும்புக்கூடு கிடந்துள்ளது.

மேலும் சில இடத்தில் மட்டும் லேசாக மக்கிய நிலையில் சதை இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் எலும்புக்கூட்டை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |