காமன்வெல்த் விளையாட்டு 2022இல் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இந்திய அணி – இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் பகுதியில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமாஹ் ரொட்ரிகோஸ் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து. இதன் மூலம் இந்திய அணி 4விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் அணியின் கேப்டன் என்.ஆர் சிவேர் 41ரன்னும், டின்.விய்யாட் 35ரன்களும், AE ஜோன்ஸ் 31ரன்னும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காமன்வெல்த் விளையாட்டு போட்டி பதக்கத்தை உறுதி செய்ததுடன், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நாடுமுழுவதும் உள்ள பலர் மகளிர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா பேட்டிங்:
இங்கிலாந்து பௌலிங்:
இங்கிலாந்து பேட்டிங்:
இங்கிலாந்து பௌலிங்: