கனரா வங்கியில் 1984 ஆம் ஆண்டு எழுத்தாளராக பணியில் சேர்ந்த எஸ்.குணசேகரன் என்பவர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பணியை திறந்தார். இந்நிலையில் இவர் கலந்த 1995 ஆம் ஆண்டு கனரா வங்கி பென்ஷன் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அமல்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தில் தன்னையும் சேர்க்க கனரா வங்கிக்கு உத்தரவிட கோரி 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கனரா வங்கி தரப்பில், ஒய்வு திட்டத்தின் கீழ் பணியை விட்டுச் சென்றபோது சேம நல நிதி திட்டத்தை மனுதாரர் தேர்ந்தெடுத்ததால் பென்ஷன் திட்டத்தை அவருக்கு அமல்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்காக மட்டும் கனரா வங்கி பிறப்பித்த திட்டம், ராஜினாமா செய்தவருக்கு பொருந்தாது என்றும் கனரா வங்கியின் நிலைப்பாடு சரி என்று கூறி குணசேகரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.