ஒருதலைக்காதலால் தீவைத்து கொளுத்தப்பட்ட அங்கிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் கடந்த வாரம் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. 24 வயதான அங்கித்தா பிட்ச்சு கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரை விக்கி நக்ரால் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை பலமுறை அங்கிதா கண்டித்துள்ளார். அங்கிதா காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த விக்கி நக்ரால் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து அங்கிதா மேல் ஊற்றி தீயை வைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கிதா கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அங்கிதா உயிரிழந்துள்ளார்.
40 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த அங்கிதா உயிரிழந்ததையடுத்து அந்த பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இந்த விவகாரத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. விக்கி நக்ராலுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.