Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் அடுத்தடுத்த பரபரப்பு…. ஆப்ரேஷனுக்கு தயாரான ops…. அலறி தூதுவிட்ட eps….. என்ன நடந்தது….?

அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஷாக் கொடுக்க கூடிய வகையில் ஓ.பன்னீர்செல்வமும்  ‘ஆபரேஷன் எஸ்’ என்கின்ற பெயரில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதுமட்டுமில்லாமல்  இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா ஆதரவுடன் பெரும்பாலான அதிமுக முக்கிய நிர்வாகிகளை பங்கேற்க செய்து எடப்பாடியை டம்மி ஆக்கி ஓரங்கட்ட செய்யவும் அதிபுத்திசாலித்தனமான திட்டத்தை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இதனை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி, “என் தலைமையை ஏற்று கொண்டால் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என்று யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள தயார் என்று கூறி, தூது அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கட்சியில் இருந்து ஒதுக்கி தள்ளப்பட்ட ஓ.பி.எஸ் சசிகலாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அடி மடியிலேயே கை வைக்க துணிந்து விட்ட நிலையில் இனியும் வீராப்பு காட்டினால் வேலைக்கு ஆகாது என்று  நினைத்து பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

Categories

Tech |