தாய்ப்பால் வார விழா நடைபெற்றுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்த விழாவானது மருத்துவர் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் செவிலியர் ராதா, அமுதா, ஜெயந்தி, ரோட்டரி சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாலவன், லோகநாதன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் மருத்துவர் நிரஞ்சன் கூறியதாவது. குழந்தைகள் பிறந்த நாள் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இந்த தாய்ப்பால் கொடுத்தால் மட்டுமே குழந்தைகள் நன்கு வளரும். மேலும் எந்த ஒரு நோயும் குழந்தைகளை தாக்காது. இந்நிலையில் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் சில காலங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.