Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்…. நடைபெற்ற மரக்கன்று நடும் விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி , குளம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா  நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், உதவி திட்ட இயக்குனர் உமா, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலர் செல்வம், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் மா, பலா, புளி, பூங்கன், பூவரசு, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது. மரக்கன்றுகளை வளர்ப்பதால் பல்வேறு வகையான நன்மைகள் ஏற்படுகிறது. எனவே நமது ஊராட்சியின் முக்கிய நோக்கம் மரங்களை வளர்ப்பதுதான். இந்த மரங்களை வெட்டுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகே காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |