மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்பட்டு வரும் பள்ளி, கல்லூரி, பெண்கள் தங்கும் விடுதி, குழந்தைகள் காப்பகம் போன்றவை 2014-ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் நடத்துவதற்கான ஒழுங்குமுறை விடுதிகள் விதியின் அரசின் முறையான உரிமம் பெற்று செயல்பட வேண்டும்.
அதேபோல் நமது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதி, குழந்தைகள் காப்பகம் ஆகியவை மேலே தெரிவித்த விதியின் கீழ் அரசின் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் அரசின் உரிமம் பெறாத பள்ளி, கல்லூரி, விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை வருகின்ற 31-ஆம் தேதிக்குள் http://tnswp.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இது குறித்த விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் உரிமம் பெறாத தனியார் பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதி, குழந்தைகள் காப்பகம் ஆகியவை அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டு எவ்வித முன்னறிவிப்பு என்று சீல் வைக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.