Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு”…. இந்த தேதிகளில் தான் கலந்தாய்வு நடைபெறும்….. அறிக்கை வெளியிட்ட கல்லூரி முதல்வர்…..!!!!

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கல்லூரியில் இந்த ஆண்டில்  சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடைப்பெறுகிறது. அதன்படி வருகின்ற 10-ஆம் தேதி முன்னாள் படை வீரரின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை போன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து வருகின்ற 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கணிதம், வேதியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புள்ளியல் ஆகிய பாடப்பிரிவிற்கும், 17-ஆம் தேதி  மற்றும் 18-ஆம் தேதிகளில் வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு  நடைபெறுகிறது.மேலும் வருகின்ற 22- ஆம் தேதி காலையில் தமிழ் மொழி பாட பிரிவிற்கும், மதியம் ஆங்கில மொழி பாட பிரிவிற்கும் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு குறித்த விவரங்கள் அனைத்து மாணவர்களுக்கும் எஸ். எம். எஸ்., கல்லூரி இணையதளத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி தகவல் பலகையில் கலந்தாய்விற்கான கட்-ஆப் மதிப்பெண்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து  கால தாமதமாக வரும் மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ள்ளார்.

Categories

Tech |