Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று(ஆகஸ்ட் 7) 50 ஆயிரம் இடங்களில்….. மக்களே மறந்துறாதீங்க….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட வருகின்றன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் பணியை தீவிர படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் சுகாதார பணியாளர்கள்,முன்கல பணியாளர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6மாதங்களான 60 வயதை கடந்தவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.மேலும் 18 முதல் 59 வயது உடையவர்களுக்கு அரசு மையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |