Categories
தேசிய செய்திகள்

உஷார்..! டாட்டூ குத்திய 14 பேருக்கு HIV தொற்று…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

உத்தர பிரதேச மாநிலம் பராகாவன் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உள்பட 14 பேர் மலிவான விலையில் பச்சை குத்தி கொண்டதில் அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மலேரியா காய்ச்சல் உள்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் எந்த பயனும் இல்லை. காய்ச்சல் குறையவே இல்லை. இறுதியில் அவர்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது, அதில் தொற்று இருப்பது அனைவருக்கும் உறுதியானது.

இவர்களில் ஒருவருக்கும் பாலியல் ரீதியிலான தொடர்பிலோ அல்லது தொற்று ஏற்பட்டவரின் ரத்தம் வழியேவோ பாதிப்பு ஏற்படவில்லை. சமீபத்தில் அவர்கள் அனைவரும் பச்சை குத்தி கொண்டனர் என்பதே அவர்களுக்கு இடையேயான பொதுவான ஒரு விசயம் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு பச்சை குத்திய நபர், ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்தி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. பச்சை குத்தும் ஊசியின் விலை அதிகம் என்பதால், பணத்தை மிச்சப்பட ஒரே ஊசியை பயன்படுத்தியதால் விபரீதம் ஆகியுள்ளது.

Categories

Tech |