பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சோனே நதியில் மோட்டார் படகு ஒன்றில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். படகில் இருந்தவர்களில் சிலர் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமைத்துக் கொண்டிருந்தன. அப்போது திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் உயிரிழந்தவர்களடைய உடலை கரைக்கு கொண்டு வந்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். கேஸ் சிலிண்டர் வெடித்து நான்கு பேர் பலியான சம்பவம் பெறும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..