Categories
தேசிய செய்திகள்

நீட் விலக்கு எப்போது….? தமிழகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது…. மா சுப்ரமணியன் விளக்கம்….!!!!!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 ம் வருடத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகத்தை  அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கியுள்ளார். அவருடன் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாசுபிரமணியன் கூறியதாவது  மக்களை தேடி மருத்துவம் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அரசு மருத்துவம்  அனைவருக்கும் போய் சேர வேண்டும் எனும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. அந்த திட்டம் இரண்டாம் வருடம் அடி  எடுத்து வைக்கிறது.

இந்த திட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் 74.92% பேருக்கு பரிசோதனையும்,83,23,723 பேருக்கு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டிருக்கிறது.1, 56,57,595 மருந்து பெட்டிகள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் 83,73,724 மருந்துகள் வினியோகம் ஆகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மருந்து காலியாகிவிட்ட நபருக்கு ரிபீட்டட் சேவை முறையில் வழங்கப்பட்டிருக்கிறது. நோயாளிகளின் உடம்பில் உள்ள குறைபாடுகள் பற்றி தெரிந்து கொள்ள சுகாதார குடும்ப புத்தகம் வழங்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது தமிழக முழுவதும் மருத்துவ குடும்ப அட்டை வழங்க இருக்கின்றோம். இந்த திட்டத்தை பொறுத்தவரை சென்னையில் காலதாமதம் ஆகினாலும் 15,75,400 பேர்  பரிசீலணையில்  உட்படுத்தப்பட இருக்கின்றனர்.

மேலும் இந்த திட்டத்தில் முக்கியமாக மலைவாழ் மக்களுக்கு முதலில் கொண்டு செல்லும் நோக்கத்தில் திட்டம் சென்னையில் தாமதமாக இருக்கிறது. கிராமப்புற மக்களின் மருத்துவம் பார்க்க இந்த திட்டம் மூலம் பத்தாயிரம் செவிலியர்கள் மேல் இருக்கின்றனர். 19,535 பேர் இந்த திட்டத்திற்கு முழுமையாக செயல்பட்டு வருகின்றோம். இன்னும் 2000 வரை இந்த திட்டத்திற்காக நியமிக்க இருக்கிறது. மேலும் நீட் தேர்வை பற்றி பேசிய அமைச்சர் நீட் விலக்கில் தமிழகம் தான் தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி இருக்கிறோம்.

நீட்  விலக்கில்  முன்னேற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார். சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் செவிலியர்கள் குறைபாடு இருந்து வருவது உண்மைதான் தற்போது இந்த காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான நேர்காணல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் தமிழக முழுதும் இருக்கக் கூடிய அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் செவிலியர்கள் அமர்த்தப்படுவார்கள் என மா.சுப்ரமணியன் பேசியுள்ளார்.

Categories

Tech |