நமது நாட்டின் 75 வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக வருகின்ற 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க விடப்படுகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மெல்வின் பங்கேற்று பாடுகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மேரி மெல்வின் பாடகி, நடிகை, ஊடக ஆளுமை என பல முகங்களை கொண்டிருக்கிறார்.
ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா, டெனால்டு டிரம்ப் என மூன்று அமெரிக்க ஜனாதிபதிக்கு இசை நிகழ்ச்சி நடத்தி பாடி இருக்கின்றார். இந்தியாவின் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஷரே மற்றும் ஜன கன மன போன்ற பாடல்களுக்கு பெயர் பெற்றவர். இந்த மேரி மெல்வின் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலிங் அழைப்பின் பெயரில் அமெரிக்காவின் பிரதிநிதியாக அவர் இங்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தனது பயணத்தால் உற்சாகத்தின் உச்சியில் இருக்கின்ற இவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் புனித பயணமாக இந்தியா வருகின்றேன் மனித உரிமை பேராளியான டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் அடிச்சுவடுகளை பின்பற்றி 1959 ஆம் வருடம் அவர் இந்தியாவிற்கு புனித பயணம் மேற்கொண்டதன் மூலமாக இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமெரிக்காவின் கலாச்சாரத் தூதராக பங்கேற்பதில் நான் மிகவும் பெருமை அடைகின்றேன். மேலும் இந்த பொக்கிஷம் போன்ற இந்த நாட்டை நான் கொண்டாடுவதில் பரவசமடைகின்றேன்.
இந்தியா உடனும் உலகம் எங்கும் உள்ள இந்திய சமூகங்களுடன் எனது அர்த்தமுள்ள உறவை கொண்டாடுகின்றேன். இந்திய சுதந்திரத்தின் இந்த முக்கிய கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஜனநாயக கூட்டை முன்னிலைப்படுத்துகின்றேன். நான் எனது இந்திய பயணத்திற்கு தயாராகின்ற இந்த வேளையில் எனது இதயத்தின் உணர்வுகள் மற்ற நாடுகளுக்கு நான் சுற்றுலா பயணியாக செல்லலாம். ஆனால் இந்தியாவிற்கு நான் புனித பயணமாக வருகின்றேன் என்ற டாக்டர் மார்டின் லூதர் கிங் வார்த்தைகளை எதிரொலிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஸ்போரோ அமைப்பின் நிறுவனம் எம் ஆர் ரங்கசாமி அழைப்பின் பெயரில் மேரி மெல்வின் இந்தியாஸ் ப்ரோ குளோபல் போரத்தில் முதன்முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்துகின்றார். அவர் இந்த தேசிய கீதத்தை பாடுகின்றார் பத்தாம் தேதி மாலை சர்வதேச இளம் பியானோ இசை மேதை லித்தியன் நாதஸ்வரத்துடன் இணைந்து அவர் பாடுகின்றார். மேலும் இந்த லித்தியன் நாதஸ்வரம் சென்னையை சேர்ந்த 16 வயதான இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.