குமரி மாவட்டத்தில் குளச்சல் வண்ணாத்திவிளை நரிக்கல் சாலையில் சத்தியநேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரோஸ்லி(70). இவர் தனது வீட்டில் முன்பாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மதிய ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிகரெட் வாங்குவது போல் நடித்து ரோஸ்லி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்து சென்றனர். இது குறித்து ரோஸ்லி குளச்சல் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது இரும்புலி சந்திப்பில் வரும்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்க போலீசார் சென்றபோது, இருவரும் தப்பியோட முயன்றனர். உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பேட்டை புன்னபுரத்தை சேர்ந்த வைஷாக்(32) மற்றும் சுனித்(32) என்பதும், மூதாட்டி ரோஸ்லியிடம் நகை பறித்து சென்றதும் தெரிய வந்தது. அதனைப் போல பல பெண்களை கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. அதாவது அவர்கள் குளச்சல், இரணியல், கொலங்கோடு, மண்டைக்காடு, கருங்கல், ராஜக்கமங்கலம் போலீஸ் நிலைய பகுதிகளிலும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதுமட்டுமில்லாமல் 25 மேலும் அவர்களை போலீசார் கைது செய்தனர்.