Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பருத்தி ஏலம்: ரூ.3 1/4 கோடிக்கு விற்பனை…. போட்டி போட்டு எடுத்த வியாபாரிகள்….!!!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகேள்ள பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலமானது நடந்தது. இந்த ஏலத்திற்கு கர்நாடக மாநிலம் மைசூரு, ஊக்கியம் மற்றும் தர்மபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8 ஆயிரத்து 348 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இவற்றில் பி.டி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் விலையாக 11 ஆயிரத்து 732 ரூபாய்க்கும், அதிகபட்சம் 12 ஆயிரத்து 308 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதையடுத்து மொத்தம் 3 கோடியே 32 லட்சத்து 85 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனையாகியது. ஆந்திரமாநில வியாபாரிகள் மற்றும் கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, திருப்பூர், கொங்கணாபுரம், பெருந்துறை, பவானி, அந்தியூர் பகுதி வியாபாரிகள் போட்டி போட்டு பருத்தியை ஏலம்எடுத்து சென்றனர். 6வது வாரமாக பருத்தி மூட்டைகள் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |