உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் நவீன் குமாரின் மகள் ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். அதற்கு நவீன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,அவரின் மகள் அந்த நபருடன் தொடர்ந்து பேசி வந்ததும் தனது காதலை முறித்துக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த நவீன் தனது மகள் காலில் அடிபட்டுள்ளதாக கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
வீட்டிலிருந்தபோது அங்கு வந்த குரங்கை பார்த்து பயந்து மாடியில் இருந்து மகள் கீழே விழுந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு தனது மகளை சிகிச்சைக்காக மாற்றி உள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் அவரது உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
அப்போது விஷமாக மாறக்கூடிய பொட்டாசியம் குளோரைடு ஊசியை யாரோ செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. உடனே இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த நிலையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது டாக்டருடைய ஒரு நபர் நுழைவதை கண்டுபிடித்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்த நரேஷ் குமார் மருத்துவர் உடைய இளம் பெண் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றதும்,பெண்ணின் தந்தை நவீன் குமார் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அந்த பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொள்ளும்படி தன்னிடம் கூறியதால் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இளம் பெண்ணின் தந்தையான நவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.