Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் சோகம்…. மேலும் ஒரு மாணவர் விடுதியில் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொட்டி மடுவு கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ஊத்தங்கரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கேபிள் ஒயரில் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது தாத்தா உயிரிழந்ததால் கோபாலகிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்ததாகவும், இரு முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. அதனால் விடுதி அறையில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |