Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என் மனைவியை கைவிடுங்கள்”…. தற்கொலை செய்த கணவர்….. சப்-இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சும் ஆடியோ…. பெரும் பரபரப்பு….!!!!

மதுரை ஏச்.எம்.எஸ். காலனி ஜானகி நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணேசனுக்கு அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதது. எனவே கோபத்துடன் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனம் வருத்தம் அடைந்த கணேசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எச்.எம்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கணேசன் தற்கொலைக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது. அதாவது கணேசன் குடிபோதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறு ஈடுபட்டு வந்தார்.

அது தொடர்பாக மனைவி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுப்பது அதன் பிறகு இருவரும் சமரசமாகி ஒன்றாக குடித்தனும் நடுத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கணேசன் மனைவிக்கும் ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு இடையே கள்ள தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இது குறித்து அறிந்த கணேசன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கணேசன் சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்போனில் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது அந்த ஆடியோவில்,

கணேசன்: வணக்கம் சார், புகார் கொடுக்க வந்த இடத்தில் இப்படி பண்ணலாமா. பேசுவதில் தப்பு இல்லை. ஆனால் பேசுகிற விஷயம் தப்பாக இருக்கிறதே. தண்ணி அடித்தவன் எல்லாம் ஆம்பளை கிடையாது என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள் இப்படி பண்ணினால் என்ன அர்த்தம்.

சப்-இன்ஸ்பெக்டர்: எதுவும் தப்பாக பண்ணி இருந்தால் மன்னித்து விடு. இனிமேல் அப்படி நடக்காது.

கணேசன்: எனக்கு ஒரே ஒரு பிள்ளை. நான் விரும்பி தேர்ந்தெடுத்த வாழ்க்கை. நான் மது அருந்திவிட்டு அவளிடம் சண்டை போட்டேன். அது உண்மை தான். ஆனால் உங்களிடம் புகார் செய்யத் தானே அவள் வந்தாள். அவளிடம் நீங்கள் இவ்வளவு தூரம் பேசி பழகி இருந்தால், எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும். இன்று காலையில் இருந்தே நீங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் பேசிய அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும். அவள் என்னிடம் இப்போது வரை பொய் சொல்கிறாள். நான் மனதளவில் நொந்து போய் உள்ளேன்.

சப்-இன்ஸ்பெக்டர்: நடந்த விஷயங்களை விட்டு விடு. இனிமேல் அப்படி நடக்காது. சரியா.

கணேசன்: தயவு செய்து அவளுடன் தொடர்பை விட்டு விடுங்கள். என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம். உங்கள் வீட்டில் யார்-யார். என்னென்ன செய்கிறார்கள் என்பது வரை எல்லாமே பார்த்து விட்டேன். நேரில் வந்து பேச ஒரு நிமிடம் ஆகாது. வேண்டாம். கையெடுத்து கும்பிடுகிறேன். இதோடு விட்டு விடுங்கள்.

சப்-இன்ஸ்பெக்டர்: சரிப்பா. இனிமேல் அப்படி நடக்காது. நீ உன் குடும்பத்தை சரியாக பார்த்துக் கொள்.

கணேசன்: புகார் கொடுக்க வந்தவளை நீங்கள் இப்படி பயன்படுத்தி இருக்கக் கூடாது. நான் இந்த விஷயத்தில் வெளிப்படையாக பேசி அவமானப்பட விரும்பவில்லை. தயவு செய்து இனிமேல் மெசேஜ் எதுவும் வேண்டாம்.

சப்-இன்ஸ்பெக்டர்: இனிமேல் உன் குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை மன்னித்துவிடு.

இவ்வாறு அவர்கள் உரையாடல் ஆடியோவில் பதிவாகி உள்ளது. அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் போலீஸ் அதிகாரிகளும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறர்கள். இந்த சம்பவத்தால் மதுரை போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

 

Categories

Tech |