நடிகர் சூரி படப்பிடிப்பின்போது பஜ்ஜி சுட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சசிகுமார் மற்றும் கார்த்திக்கா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நகைச்சுவை நடிகர் சூரி இதில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பரபரப்பான படப்பிடிப்புக்கு நடுவே படக்குழுவுக்கு வழங்கும் விதமாக சூரி சுடச் சுட பஜ்ஜி தயார் செய்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.