Categories
உலக செய்திகள்

“அணுமின் நிலையம் கடும் சேதம்”…. உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில்…. ரஷ்யாவை கடுமையாக விமர்சித்த அதிபர் ஜெலன்ஸ்கி….!!

உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு உலை மூடப்பட்டுள்ளது. 

உக்ரைன் நாட்டில் சபோரிஸ்ஷியா என்ற அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்குள்ள பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உக்ரைனில் உள்ள சபோரிஸ்ஷியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்ய இராணுவ படைகள் சபோரிஸ்ஷியா ஆலையை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சபோரிஸ்ஷியா அணுமின் நிலையத்தின் மீதான கொடிய தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அதிபர் ரஷ்ய மீது குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து உக்ரைன்  அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது, “உலகில் முதன்முதலாக ரஷ்ய பயங்கரவாதிகள் மின் உற்பத்தி நிலையத்தை பயங்கரவாதத்திற்காக பயன்படுத்தினார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றன் மீது ஒன்று குற்றம் சாட்டி வரும் நிலையில், அணுமின் நிலையம் கடுமையான சேதம் அடைந்துள்ளது, இதன் விளைவாக அதன் உலைகளில் ஒன்று மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அணுமின் நிலைய தாக்குதலால் அணு உலைகளில் ஒன்று மூடப்பட்டு, மின்கம்பி உடைந்தது, மேலும் ஹைட்ரஜன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவு  ஏற்படுவதனால் கவலைகளும் எழுந்துள்ளது. அணு உலையில் தீ பற்றும் ஆபத்து இன்னும் கணிசமாக உள்ளது என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று இந்த தாக்குதல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவை விமர்சித்தது. ஆனால் ஆலையை கைப்பற்றினாலும் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா கூறுகின்றது. மேலும் அணு ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் படையினர் மீதும் ரஷ்ய குற்றம் சாட்டியுள்ளது.

Categories

Tech |