செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு முன்பு தேர்தல் கால வாக்குறுதிகளாக அளித்ததை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அந்த அளவிற்கு இன்றைய தினம் ஆவடி மாநகராட்சி ஒரு காஸ்மோபாலிட்டன் சிட்டி. இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு துறைக்கு சொந்தமான HF, OCF, CVD, CVRD, இன்ஜின் பேக்டரி அதே போன்று இங்கே மத்திய, மாநில சிறப்பு காவல் படை எல்லாம் இங்கு இருக்கிறது.
ஏறக்குறைய கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்கின்ற அனைத்து தரப்பட்ட மக்கள் உண்ணும் உணவால், உடுக்கின்ற உடையால், நடையால், உடையால், பாவனையால் அனைத்திற்கும் மாறுபட்டவர்கள். எல்லாம் ஆவடியில் இன்றைய தினம் குடியிருந்து வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.
அப்படிப்பட்ட ஆவடி மாநகராட்சியில் இங்கிருந்து அவருடைய சொந்த மாவட்டத்திற்கு, மாநிலத்திற்கு போவதற்கு பேருந்து வசதிகள் வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதல்வரிடம் கோரிக்கைகளாக வைத்தார்கள். அந்த கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்தவுடன் நான் நிறைவேற்றி தருவேன் என்று தேர்தல் கால வாக்குறுதிகளாக அறிவித்தார்கள்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஆவடியில் இருந்து செங்கோட்டைக்கும், ஆவடியில் இருந்து பெங்களூருவிற்கும், அதேபோன்று இன்றைய தினம் ஆவடியில் இருந்து தூத்துக்குடிக்கும், ஆவடியில் இருந்து திருநெல்வேலிக்கும் இன்றைய தினம் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
இதே போன்று இதை பார்த்து சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற மத்திய அரசு துறையை சேர்ந்த சின்ராசு அவர்கள் சேலத்திற்கும் இயக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார். அதேபோன்று ஆந்திராவிற்கும் இயக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார்கள். இவை எல்லாம் பல மாவட்டங்களுக்கும், அருகாமையில் இருக்கின்ற அடுத்த மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்குவதற்கான பெரும் முயற்சி எடுக்கப்படும்.
அந்த அளவிற்கு இன்றைய தினம் போக்குவரத்து துறையில் ஆக்கமும், ஊக்கத்தையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், நல்லதொரு வழிகாட்டுதலுக்கு இணங்க போக்குவரத்து துறை அமைச்சர் மரியாதைக்குரிய நம்முடைய எஸ்.எஸ். சிவசங்கரன் அவர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி கொண்டு வருகிறார்.
அந்த அடிப்படையில் இன்றைய தினம் இரண்டு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அடுத்த மாவட்டங்களுக்கும் அடுத்த மாநிலங்களுக்கும் போவதற்கான முயற்சி தமிழகம் முதல்வரின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பதிக்கும் பேருந்து இயக்குவதற்க்காக முயற்சிகளும் எடுத்துக் கொண்டு வருகிறோம். விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.