Categories
மாநில செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. தீயணைப்புத் துறையினரின் துரித செயல்…. பரபரப்பு….!!!!

சென்னை அண்ணா நகர் 2-வது மெயின் சாலையில் அப்பல்லோ செஜௌர் (Apollo Sejour) என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்பு வளாகத்தில் 4 தளங்களில் 8 வீடுகள் இருக்கிறது. இதில்  குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்திலுள்ள வீட்டில் ஈஷா, உமேமத் என்ற தம்பதியும் அவர்களின் மகள், பேரன்,பேத்தி என மொத்தம் 5 பேர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில் ஹாலிலுள்ள ஸ்விட்ச் போர்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் தீயை அணைப்பதற்கு வீட்டில் உள்ளவர்கள் முயற்சிசெய்தனர்.

இதையடுத்து தீ மேலும் பரவியதால் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அந்த குடியிருப்பில் வசித்த அனைவரும் கீழே இறங்கி சாலைக்கு வந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் 15-க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டனர். முதலாவதாக 4வது மாடியில் பற்றிய தீ, மற்ற வீடுகளுக்கு பரவாமல் தடுக்க அரை மணிநேரத்தில் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தீ விபத்து நடைபெற்ற 4வது மாடியிலிருந்த வீடு முழுவதும் பரவிய தீயால் ஹாலில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து கருகியதாக தீயணைப்புப் படையினர் தகவல் தெரிவித்தனர். அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து அனைவரும் வெளியேறியதால் உயிர்சேதமின்றி பெரும்விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. நேற்றிரவு 11 மணி அளவில் ஹாலில் இருந்த ஸ்விட்ச் போர்டில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் தீ பரவ தொடங்கியது. அதை அணைக்க முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை என்பதால், உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி சாலைக்கு வந்துவிட்டோம் என வீட்டின் உரிமையாளர் ஈஷா தெரிவித்தார்.

Categories

Tech |