பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன (British Airways) விமானம் ஓன்று அதிவேகமாக வீசிய காற்றுக்கு நடுவே அட்லாண்டிக் பெருங்கடலை 5 மணி நேரத்துக்குள் கடந்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு நார்வேகியன் நிறுவன விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரம் 13 நிமிடங்களில் சென்றது. இதுவே யாரும் முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. இந்தநிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங்க் 747 ரக விமானம், அதிவேகமாக வீசிய காற்றுக்கு நடுவில் மணிக்கு 800 மைல்கள் வேகத்தில் பறந்து, அட்லாண்டிக் பெருங்கடலை வெறும் 4 மணி நேரம் 56 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
லண்டனில் எப்போதும் அதிவேகமாக காற்று வீசும் என்பதால், அங்கு பல விமானங்கள் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டு தாமதமாகி வரும். அதுமட்டுமில்லாமல் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சாதனை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.