சிறுமியை தாயாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு விழுப்புரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜா(22) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.