காற்றாலை விசிறி ஏற்றி வந்த லாரி சாலையில் திரும்ப முடியாமல் நின்றதால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் இருந்து 300 அடி நீள காற்றாலை விசிறியை ஏற்றுக்கொண்டு கரூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்ததால் நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலையில் திரும்ப முடியாமல் லாரி நின்றதால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.