Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு இதுல அத்துப்பிடி…! விருதுலாம் வாங்கி இருக்கேன்… மிகப்பெரிய ஊழல் நடந்துருக்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆவினில்  மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. திமுகவினர் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள். இதை மக்களும் நன்கு அறிவார்கள். இந்த ஊழல் இன்றைக்கு தானே வெளியே வந்திருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் சொல்லல. அதை வாங்கிய நுகர்வோர் தான் எடை போட்டு பார்த்து கண்டுபிடித்து தான் வெளியே கூறி இருக்கிறார்.

இதிலிருந்து ஒரு பாக்கெட்டுக்கு 70 ml என்று நினைக்கிறேன்.‌ ஒரு பாக்கெட்டுக்கு 70 ml குறைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு நாளைக்கும் எவ்வளவு பாக்கெட் அடிக்கிறாங்க பாருங்க. ஒரு பாக்கெட்டில் மட்டும் எப்படி பால் குறைவாக இருக்கும். நானும் 3 1/2 ஆண்டு காலம் பால் உற்பத்தி கூட்டுறவு சேர்மன் ஆக இருந்திருக்கிறேன். எனக்கு இதுலா நல்ல அத்துபிடி.

இந்தியாவிலேயே சிறந்த முறையில் கையாண்டேன் என்று எனக்கு அரசு விருதும் கொடுத்திருக்கிறது. முதன்முதலில் நான்தான் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கும்போது விருது வாங்கினேன். இதெல்லாம் எனக்கு நல்ல அத்துபிடி. அதனால இதுல தவறு நடந்தது உண்மைதான். இன்றைக்கு மக்களுக்கு கொடுக்கின்ற பாலில் கூட ஊழல் செய்கின்ற ஒரே அரசாங்கம் இந்த விடியா திமுக அரசாங்கம் தான் என விமர்சித்தார்.

Categories

Tech |