Categories
உலக செய்திகள்

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை குறித்து…. பாராட்டு தெரிவித்துள்ள…. சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி பாலகிருஷ்ணன்….!!

சிங்கப்பூர் வெளியுறவுத் துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன், கம்போடியாவில் மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சிங்கப்பூர் வெளியுறவுத் துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன், கம்போடியாவில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு, இந்தியா கொண்டிருக்கும் அடிப்படை அம்சங்களைக் குறிப்பிட்டு அவர் பாராட்டினார். இந்தியாவின் டிஜிட்டல் அடையாளம் மற்றும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறைகளுக்காகப் பாராட்டியுள்ளார். மேலும், தங்கள் நாட்டிற்கு இந்தியா ஒரு “தெளிவான வாய்ப்பு” என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவிற்கு டிஜிட்டல் நிதி, டிஜிட்டல் உள்ளடக்கம்  என்பன போன்ற சில பலன்கள் உள்ளன. டிஜிட்டல் அடையாளம் மற்றும் டிஜிட்டல் கட்டண பணபரிவர்த்தனை முறைகள் மூலம் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு ஒரு தெளிவான வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. சிங்கப்பூரில், நிச்சயமாக எங்களிடம் இந்த அமைப்புகளும் உள்ளன. ஆனால் தென்கிழக்கு ஆசியாவின் மற்ற பகுதிகளுக்கு, எங்கள் கட்டண முறைகளை எவ்வாறு இணைக்கலாம் என்பதை ஆராய்வதற்காக இந்தியா ஒரு தெளிவான வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. மேலும், ஆசியான்-இந்தியா வர்த்தகத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்து வருகிறோம்.

இதன்மூலம், இந்திய துணைக்கண்டத்திற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையே சரக்குகளின் இயக்கத்திற்கான கட்டுப்பாடுகளை குறைப்பது, சுங்க அனுமதியை எளிதாக்குதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குதல் ஆகியன சாத்தியமாகும்” என்று அவர் கூறினார். இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 3.2 % பங்கைக் கொண்ட சிங்கப்பூர், 2020-21 காலகட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் 6வது பெரிய வர்த்தக தோழமை நாடாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் போது, இக்கட்டான சூழலில் சிங்கப்பூரிலிருந்து இந்திய ராணுவ கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என பல மருத்துவ சாதனங்கள் கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |