பஜாருக்குள் புகுந்த காட்டு யானைகளை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள அய்யன்கொல்லி பஜாரில் உலா வந்த 2 காட்டு யானைகள் ஜனார்த்தனன் என்பவரது கடையின் இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்திய காட்டு யானை அரசு, உண்டு உறைவிட பள்ளியின் சுற்றுசுவரை உடைத்து சேதப்படுத்தியது.
இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது காட்டு யானைகள் அய்யன்கொல்லி பஜாருக்குள் நுழைந்து சாலையில் ஓடியது. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.